மாகாராஷ்டிர மாநிலத்தில் சிறுவர்கள் இருவரை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்திய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஜால்கன் மாவட்டத்தில் தாழ்தப்பட்ட சமூகம் அல்லாத மக்கள் குளிக்கும் இடத்தில் குளித்ததாக கூறி, தலித் சிறுவர்கள் இருவரை நிர்வாணத்துடன் சிலர் அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

அப்போது உடனிருந்தவர்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதைப் பார்த்த அந்த சிறுவர்கள் உடலை இலைகளால் மறைத்த போது, அவர்கள் அந்த சிறுவர்களை இலைகளை எடுக்குமாறு இடைவிடாமல் அடிக்கின்றனர்.

இதில் சிறுவர்கள் வலி தாங்க முடியாமல் வேண்டாம் என்று கதறி அழுகின்றனர். இந்த வீடியோவை குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு சிறுவர்களை அடிப்பவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here