கடந்த வாரம் அமெரிக்க நாட்டின் 46வது அதிபராக பதவி ஏற்றார் ஜோ பைடன். 78 வயதான அவர் செல்ல பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். மேஜர், சேம்ப் என இரண்டு ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் தான் அதிபர் பைடனின் பேவரைட். இப்போது அந்த இரண்டு நாய்களும் அமெரிக்க அதிபரின் குடியிருப்பாக வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளன.
முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தை அடுத்து பைடனின் ஆட்சியில் தான் செல்ல பிராணிகள் அதற்கான பிரத்யேக மேன்ஷனுக்கு வருகை தந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மேஜருடன் டெல்வெயர் வீட்டில் விளையாடிய போது பைடனுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சேம்பை 2008 ஆம் ஆண்டிலிருந்தும், மேஜரை 2018 வாக்கிலிருந்தும் பைடன் வளர்த்து வருகிறார். இதில் மேஜரை பைடன் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செல்ல பிராணிகள் எதுவும் வளர்க்கவில்லை.
சாதாரண மக்களின் மனநிலையை வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பு எப்படி கூல் செய்கிறதோ அதே போல தான் சக்திவாய்ந்த பதவியில் இருக்கும் நபர்களுக்கும் நல்ல கம்பெனியனாக வளர்ப்பு ஜீவன்கள் உதவுகின்றன. வெள்ளை மாளிகையில் இதற்கு முன்னதாக அதிபர்கள் சிலர் செல்ல பிராணிகளை வளர்த்துள்ளனர்.