நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அனிஷாவை பார்த்ததும் காதலில் விழுந்த விஷால் உடனே திருமணம் செய்து கொள்ளும் முடிவினை எடுத்து நிச்சயதார்த்தமும் முடிந்தது.
இவர்களின் திருமணம் விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்பு அக்டோபர் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், இவர்களது திருமணம் நின்றுவிட்டதாக தகவல் தீயாய் பரவி வருகின்றது.
அனிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை எல்லாம் அழித்துவிட்டதால் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் விஷால் அவ்வாறு செய்யாததால் சற்று சந்தேகம் எழுந்திருந்தது.
இந்நிலையில் விஷாலின் திருமணம் நின்றுவிட்டதாக உறுதியான தகவலை நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கான காரணத்தினை வெளியிட மறுத்துள்ளார். ஆனால் விஷால், அனிஷா இருவருமே தனது வேலைகளை செய்து வருகின்றனர்.
விஷாலுக்கும், அனிஷாவுக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாம். இதையடுத்து தான் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் திருமணம் நின்றுவிட்ட தகவல் அறிந்து அவரின் ரசிகர்கள் தான் பாவம் வருத்தத்தில் காணப்படுகின்றனர்.