Saturday, July 24, 2021

விளையாட்டு செய்தித் துளிகள்…

- Advertisement -
- Advertisement -

ஐ ஆம் வெயிட்டிங்….I’m waiting…
கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா நேற்று சமூக ஊடகத்தில், இந்த படத்தை வெளியிட்டு, ‘நண்பர்களே இப்படி மீண்டும் இணைவதற்காக காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளியேறினார் பியான்கா
பிரான்சில் ஸ்ட்ரஸ்பர்க் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் நேற்று கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு(7வது ரேங்க்) காயம் காரணமாக வெளியேறினார். அதனால் காலியிறுதியில் அவரை எதிர்த்து களம் காண இருந்த ருமேனியா வீராங்கனை சோரனா கிறிஸ்டியா(61வது ரேங்க்) அரையிறுதிக்கு முன்னேறினார்.

- Advertisement -

ஒலிம்பிக் வைரஸ்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பானில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானிய டாக்டர்கள் சங்கம் நேற்று, ‘200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ் புதிய வகையில் உருமாறி தாக்கும்’ என்று எச்சரித்துள்ளது.

நாகல் வாய்ப்பு நழுவியது
கிராண்ட் ஸ்லாம் போட்டியா பிரெஞ்ச் ஓபன் இம்மாதம் 30ம் தேதி பாரிசில் தொடங்குகிறது. அதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் இப்போது நடக்கின்றன. அதன் ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல் 3-6, 3-6 என நேர் செட்களில் சிலி வீரர் அலெஜண்ட்ரோ டபிலோவிடம் தோற்று வெளியேறினார். அதன்மூலம் தொடர்ந்து 3வது முறையாக பிரஞ்ச் ஓபனில் விளையாட இருந்த வாய்ப்பு கை நழுவியது.

- Advertisement -

எல்லோருக்கும் தடுப்பூசி
‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.’ என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐஒஏ) அறிவித்துள்ளது. முன்னதாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளவர்களில் யார்,யாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரங்களை தெரிவிக்கும்படி விளையாட்டுச் சங்கங்களுக்கு ஐஒஏ அறிவுறுத்தியிருந்தது.

வெளிநாட்டு பயிற்சியாளரா?
‘வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நமது பேட்மின்டன் வீரர்கள், வீராங்கனைகள் வளர்ச்சிக்கு முக்கியம். ஆனால் பயிற்சி அளிக்க வரும் 2வது சிறந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களால், 2வது சிறந்த வீரர், வீராங்கனைகளைதான் உருவாக்க முடியும். சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்க முடியாது’ என்று முன்னாள் வீரரரும், பயிற்சியாளருளான கோபிசந்த் தெரிவித்துள்ளார்.

ஜிடேன் விலகல்
ஸ்பெயினின் லா லிகா தொடரல் ரியல் மாட்ரிட் 2வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. அதனால் அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜினேடின் ஜிடேன்(பிரான்ஸ்) விலகினார். உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் கேப்டனான ஜிடேன் கடந்த 11 ஆண்டுகால பயிற்சியாளராக இருக்கிறார். இந்த ஆண்டுதான் முதல்முறையாக அவர் பயிற்சி அளித்த அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -
Latest news
- Advertisement -
Related news