நேற்று இடம்பெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் 500 பேர் வரை ஒன்றுகூடியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு Marseille மாவட்டத்தின் 14 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. , இங்குள்ள boulevard de Plombières பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் ஒன்றில் இந்த விருந்து விழா இடம்பெற்றது. இதில் 500 பேர் வரை கலந்துகொண்டிருந்தனர்.
விருந்து விழாவில் கலந்து கொள்ள இருவருக்கு €150 யூரோக்கள் கட்டணம் அறவிடப்பட்டிருந்தது. விருந்தில் கலந்துகொள்பவர்களுக்கு மதுபானங்களும் வழங்கப்பட்டது. இந்த விருந்து விழா சமூக வலைத்தளங்கள் ஊடாக நேரடியாக ஒளிபரப்பட்ட்டது.
விழாவில் கலந்துகொண்டவர்களில் அனேகமானோர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவு 1.30 மணி அளவில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பலர் தப்பி ஓட்டியுள்ளனர். அவர்களில் பலரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
அவர்களில் பலருக்கு 135 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்பட்டது. உள்ளிருப்பு சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதால், இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு அரசி தடை விதித்துள்ளமை வாசகர்கள் அறிந்ததே.
boulevard des airs, boulevard, boulevard voltaire aujourd’hui, boulevard du palais, boulevard du store, boulevard des leds, boulevard voltaire politique, boulevard voltaire.fr, boulevard voltaire la liberté guide nos pas, boulevard des passions forum, boulevard nature le mans carte,