fbpx
Thursday, April 22, 2021
Homeசினிமா Tamil cinema Newsவலிமை படத்திற்கு பின் அஜித் எடுத்துக் கொள்ளப்போகும் பிரேக்... அதிருப்தியில் ரசிகர்கள்

வலிமை படத்திற்கு பின் அஜித் எடுத்துக் கொள்ளப்போகும் பிரேக்… அதிருப்தியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித் வலிமை திரைப்படத்திற்கு பின்பு ஒரு இடைவேளை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து உருவாக்கி வரும் வலிமை படத்தினை மக்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்த நிலையில் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித் சைக்கிளில் பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் சைக்கிளில் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.

- Advertisement -

அஜித்துடன் சைக்கிளிங் சென்றுள்ள சுரேஷ் என்பவர் அஜித்தின் இந்த பயணம் பற்றி பதிவிட்டுள்ளார். அதில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக அஜித்துடன் இணைந்து தான் சைக்கிளிங் செய்வதாகவும் தல அஜித் தான் பார்த்ததில்லையே கடுமையான போராளி என்றும் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு சைக்கிளிங் என்றும் சுரேஷ் தனது பதிவில் கூறி இருந்தார்.

- Advertisement -

மேலும் அஜித் குறித்து கூறுகையில், சினிமா எனக்கு தொழில்தான். வித்தியாசமானப் படங்கள் பலவும் நடித்துவிட்டேன். அடுத்தப்படம் என்ன, அதற்கடுத்தப்படம் என்ன எனத்தொடர்ந்து சினிமா பற்றியே சிந்தித்து என்மேல் நானே ப்ரஷர் போட்டுக்கொள்ளவிரும்பவில்லை.

சிந்தித்து வாழ்க்கையை எனக்குப்பிடித்ததுபோல வாழ விரும்புகிறேன். ரைஃபிள் ஷூட்டிங், சைக்கிளிங், ரிமோட் கன்ட்ரோல்டு ஹெலிகாப்டர்ஸ், போட்டோகிராபி என எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் நான் நடிகனாக மட்டுமே நீடிக்கவிரும்பவில்லை.

எனக்குப்பிடித்த, ரசிகர்களுக்கும் பிடிக்கும்படியான கதைகளைத் தேர்ந்தெடுத்து அவ்வப்போது நடிப்பேன். அதற்காக ஒவ்வொரு தீபாவளிக்கும், ஒவ்வொரு பொங்கலுக்கும் ஒருபடம் என்றெல்லாம் என் மேல் நான் சுமையை ஏற்றிக்கொள்ளவிரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

சைக்கிளிங் மட்டுமல்லாமல் பைக் பயணம், துப்பாக்கி சுடும் பயிற்சி, ஆளில்லா விமானத்தின் ஆலோசகர் என்று பலவற்றறில் கவனம் செலுத்தி வரும் அஜித் வலிமை படத்திற்கு மற்ற படங்களில் எதுவும் கமிட் ஆகவில்லை.

அதே போன்று 2010-ல் இருந்து 2020 வரை பத்து படங்களில் நடித்திருக்கிறார் அஜித். ஒரே வருடத்தில் இரண்டு படம், அடுத்து ஓர் ஆண்டு இடைவெளி என இடையிடையே பிரேக் எடுத்தே நடித்துவருகிறார். அதனால் ‘வலிமை’ படத்துக்கு அடுத்து சினிமாவில் ஒரு சின்ன பிரேக் அஜித் எடுப்பார் என்று அஜித் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software