fbpx
Monday, April 12, 2021
Homeஆன்மீகம்ராமருக்கு அருள் புரிந்த நவராத்திரி நாயகி..

ராமருக்கு அருள் புரிந்த நவராத்திரி நாயகி..

ராமருக்கு அருள் புரிந்த நவராத்திரி நாயகி..

நவராத்திரி முதல் மூன்று தினங்களில் மலை மகளின் அம்சமான துர்கையை வழிபட்டோம். அடுத்த மூன்று தினங்களில் நாம் மகாலட்சுமி யை வழிபடவேண்டும். இன்றைய நாளில் நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.

வைஷ்ணவி என்பவள் விஷ்ணுவின் சக்தி ஆவாள். திருமாலைப் போலவே நீல நிறத் திருமேனியையும், கரிய கூந்தலையும் உடையவள், தன்னுடைய இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியவள். கருடனை வாக னமாகக் கொண்டவள். தேவி அசுரர்களை சம்ஹாரம் செய்ய புறப்பட்டபோது மும்மூர்த்தி யரும், மற்ற தேவர்களும் தங்களுடைய சக்தியை அம்பிகைக்கு அளித்தனர். அப்படி விஷ்ணுவின் சக்தியைப் பெற்ற தேவியே வைஷ்ணவி. வைஷ்ணவி தேவியை வழிபட்டால், நமக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அவளே நமக்கு அருள்வாள்.

- Advertisement -

நவராத்திரி ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வடிவமாக பாவித்து பெண் குழந்தைகளை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபடவே ண்டும். அந்த வகையில் ஐந்து வயது பெண் குழந்தைகளை நம் வசதிக்கு ஏற்றபடி ஒரு குழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு வரவழைத்து, ரோஹிணி என்ற திருப்பெ யருடன் வழிபட வேண்டும்.

- Advertisement -

ரோஹிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்று பொருள். நான்காவது நாளில் பெண்குழந்தைகளை ரோஹிணியாக பூஜித்தால், நோய் நொடிகளில் இருந்து விடுப டுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

நான்காவது நாள் காலையில் முழு அரிசியை கொண்டு படிக்கட்டு கோலம் போட வேண்டும் பிறகு லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி வழிபா ட்டுப் பாடல்களைப் பாடி விஷ்ணுவின் சக்தி யான வைஷ்ணவியை வழிபடவேண்டும்.

மாலையில் வைஷ்ணவி தேவிக்கு கதம்ப சாத மும், ஏதேனும் ஒரு சுண்டலும் செய்து நைவே த்தியம் செய்து, வீட்டுக்கு வரும் குழந்தைகளு க்கும் பெரியவர்களுக்கும் பிரசாதமாக கொடு க்கவேண்டும்.

இன்றைய தினத்துக்கான
குமாரியின் பெயர் -ரோஹிணி;
மந்த்ரம் – ஓம் ரோஹிண்யை நம:
சுவாசிநியின் பெயர் கூஷ்மாண்டா;
மந்த்ரம் – ஓம் கூஷ்மாண்டாயை நம:

இன்று அம்பிகைக்கு கதிர் பச்சை மலர்களால் அதாவது மருக்கொழுந்து, தவனம் போன்ற மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவள் அன்னை சக்திதான் என்பதால், நவராத்திரி நாள்களில் சக்தியின் ஆதர்ச வடிவமாக விளங்கும் பெண்குழந்தைகளை நாம் பூஜிக் கிறோம். இதன் காரணமாக நம்மில் சிறியவ ரையும் மதிக்கும் மனப்பான்மை நமக்கு ஏற்ப டுவதுடன், பூஜிக்கப்படும் குழந்தைகளின் மனதிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

சிவபெருமானும் ராமபிரானும்கூட நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

இன்று ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் குறித்துப் பார்ப்போம்..

தேவி பாகவதத்தில் மகரிஷி வியாசர் ராமபி ரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் பற்றி விளக்கி உள்ளார்.

சீதையை ராவணன் கடத்திச் சென்ற பிறகு ராமர் மிகுந்த துயரத்துடன் லட்சுமணனுடன் அமர்ந்திருந்தார். அப்போது திரிலோக சஞ்சா ரியான நாரதர் அங்கே வந்தார்.

அவரை வரவேற்று வணங்கிய ஸ்ரீராமனும் லட்சுமணனும் அவர் அருகே அமர்ந்தனர். ஸ்ரீராமனின் முகவாட்டத்தைக் கண்ட நாரதர் பேசத் தொடங்கினார்…

”ரகுகுல திலகா! நீ வருத்தத்துடன் இருப்பதற் கான காரணத்தை நான் அறிவேன். திரிலோக சஞ்சாரியாக நான் சஞ்சரிக்கும் வழியில் சொர்க்கத்துக்கும் சென்று வந்தேன். அங்கே எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. அந்த விவரங்களை உன்னிடம் தெரிவிக்கவே வந்தேன்” என்று கூறியவர் தொடர்ந்து

”மகாலட்சுமியின் அம்சமான சீதை முற்பிறவி யில் ஒரு முனிவரின் மகளாக வேதவதி என்ற பெயரில் தோன்றியவள். தவத்தில் இருந்தவ ளைக் கண்டு மோகம் கொண்ட ராவணன், அவளை அடைய ஆசை கொண்டு அவளுடை ய கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தான்..”

“கோபம் கொண்ட வேதவதி, ‘நாராயணனை மணக்க தவம் புரியும் என்னைக் கண்டு மோகித்து, என் கையையும் பிடிக்கத் துணிந்த உன்னை நான் கொல்வதற்காக மறுபடியும் கர்ப்பவாசம் இல்லாமல் பூமியில் தோன்று வேன்’ என்று சாபம் கொடுத்துவிட்டு, அக்னி யில் விழுந்து உயிரை மாய்த்து கொண்டாள்..”

“அவள் தான் சீதையாக அவதரித்து இருக்கி றாள். தான் அழிவதற்காகவே ராவணன் சீதை யைக் கடத்திச் சென்றிருக்கிறான். மகாவி ஷ்ணுவின் அவதாரமான நீயும் ரகுவம்சத்தில் தோன்றி இருக்கிறாய். உன்னால் ராவணன் அழியப்போவது உறுதி என்று நினைத்து தேவலோகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்” என்று கூறியவர், ராவண னை சம்ஹாரம் செய்வதற்கான வழியையும் விளக்கினார்.

”ராமச்சந்திரா! ராவணனை அழிப்பதற்கான வழியைச் சொல்கிறேன். நீ புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியில் விரதம் இருந்து, அம்பி கையை பூஜை செய்தால், அம்பிகை உனக்கு அளவற்ற சித்திகளைத் தருவாள். இந்திரனும், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து அம்பிகை யை வழிபட்டு பலன் அடைந்திருக்கின்றனர். எனவே நீயும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டி ப்பாய்” என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறைகள் பற்றியும் கூறினார்.

நாரதர் கூறியபடியே நவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மால்யவான் மலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ராமர் பிரதமை முதல் விரதம் இருந்து பூஜைகளை நடத்தினார். எட்டாவது நாள் அஷ்டமி தினத்தில் நள்ளிரவு வேளையில் மால்யவான் மலையின் உச்சியில் அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ராமருக்கு தரிசனம் தந்தாள். ராமனின் பூர்வ அவதாரங்களை உணர்த்தியதுடன், ராவணனை சம்ஹாரம் செய்ய அருள் புரிந்து மறைந்தாள்.

ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே திருவடி சரணம்..

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software