Wednesday, October 21, 2020
Home மருத்துவம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் - Exercises to improve brain capacity

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் – Exercises to improve brain capacity

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் – Exercises to improve brain capacity

train-your-brain-thinatamil
train-your-brain-thinatamil

நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சிபெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய நல்ல திட்டங்களை தீட்ட முடியும்.

 

- Advertisement -

இதுபோன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மூளையின் திறன் நன்கு மேம்படும் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள். மனதைக் கட்டுப்படுத்த முதல் பயிற்சியாக மூச்சை உள்வாங்கிக் கொண்டு ரிலாக்ஸாக உணர்ந்து, அதன்பிறகு வெளியிட வேண்டும். அதேபோன்று உங்கள் தசைகளை ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். மேலும் உங்கள் தலை முதல் பாதம் வரை உங்களையே ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்கள் மனதை ஒரு முகப்படுத்தும் முதல் உடற்பயிற்சியாகும்.

- Advertisement -

இப்படி ரிலாக்ஸ் செய்யும்போது ஒரு நேரத்தில் ஒரு பயிற்சியை மட்டும் செய்ய வேண்டும். எந்த தொந்தரவும் இல்லாமல், வேறு எந்த யோசனையும் இல்லாமல் இருப்பது அவசியம். இப்படியாக ஒரு வாரத்திற்கு 10 நிமிடமும், அடுத்த வாரத்திலிருந்து 15 நிமிடமும் தொடர்ந்து பயிற்சியை அதிகரிக்கலாம். இதன்மூலம் உங்கள் கவனம் வளர்ச்சி அடையும்.

முதல் பயிற்சியில் உங்களுக்கு மனது ஒருமுகம் அடைந்து, அதில் நீங்கள் சந்தோஷம் கிடைத்தால் உங்கள் கவனம் அதிகமாகி இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம். இதுபோன்ற பயிற்சிகள் எடுத்துக்கொள்வதற்கு உங்கள் மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நாட்கள், வாரங்கள், மாதங்கள் அல்லது சில மைல் கல் தூரம் கூட போகலாம். உங்களுடைய முழு கவனத்தையும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் பயிற்சியை தவிர வேறு எதிலும் செலுத்த கூடாது.

இந்த பயிற்சி எடுக்கும்போது ஒருவிதமான தூக்கம், பகல் கனவு அல்லது மற்ற யோசனைகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பயிற்சியை எடுத்துக் கொள்ளும்போது வேறுவிதமான சிந்தனைகள் எழுந்தால் பயிற்சியை நிறுத்திவிட்டு, முதலில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

பயிற்சியில் மனதை ஒருமுகப்படுத்த சிரமமாக இருக்கிறது என்றால் பயிற்சியின் நேரத்தை நீடித்துக் கொள்ளலாம் அல்லது மற்றொரு அமர்வையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். பயிற்சியின் தொடக்க காலத்தில் மனதை ஒரு மனப்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுத்தாலும் மனதை ஒரு மன படுத்துவது படிப்படியான முயற்சியினால்தான் முடியும். உங்கள் மூளை பதற்றம் அடையாமல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மனதை ஒருமுகப்படுத்துவது கடினம் என்று உங்கள் எண்ணங்கள் திசை திருப்பினாலும் அதைக் குறித்து விரக்தியடைய இடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் இழந்த கவனத்தை மீண்டும் பெற காலப்போக்கில் மேற்கொள்ளும் இந்த பயிற்சியின் மூலம் நீங்கள் வெற்றி பெறும் வழியைக் கண்டுபிடித்து விடுவீர்கள்.

பயிற்சியின் மூலம் முழு கவனத்தை பெற முடிகிறது என்று உறுதியாக உங்களால் நம்பிய பிறகு இதையே தொடர்ந்து, மனதை முழு கவனத்துடன் எப்போதும் வைத்திருக்க, இந்த பயிற்சியின் முழு பலனையும் பெறலாம். கீழ்க்காணும் சில பயிற்சிகள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்த துணை செய்யும்.

பயிற்சி 1

ஒரு புத்தகத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு பத்தியை தேர்வு செய்து எத்தனை வார்த்தைகள் அதில் இருக்கிறது என்று விரலால் எண்ணாமல் கண்களால் பார்த்து மனதளவில் எண்ண வேண்டும். அப்படி எண்ணிய பிறகு சரியாகதான் எண்ணினோமா என்று மறு கூட்டல் ெசய்து சரி பார்க்க வேண்டும். அப்படி சரிபார்த்த பிறகு சிறிது நேரம் கழித்து அடுத்த பத்தியையும் அதேபோன்று விரலால் அல்லாமல் கண்களால் பார்த்து மனதால் எண்ணி பயிற்சி எடுப்பது முதல் நிலை பயிற்சி ஆகும்.

பயிற்சி 2

100 முதல் 1 வரை மனதை ஒருமுகப்படுத்தி தலைகீழாக சொல்ல வேண்டும். அதை கவனமாகவும் எண்ண வேண்டும்.

பயிற்சி 3

தலைகீழாக 100 இருந்து 0 வரை 3 எண்கள் தாவித் தாவி எண்ண வேண்டும். உதாரணமாக 100, 97, 94 என்று எண்ண வேண்டும்.

பயிற்சி 4

தன்னம்பிக்கை தரும் எழுச்சியூட்டும் வார்த்தைகளைத் தொடர்ந்து 5 நிமிடம் மனதளவில் சத்தமாக தொடர்ந்து சொல்ல வேண்டும். இப்படியாக தொடர்ந்து சொல்லும்போது 10 நிமிடத்தில் மனம் ஒருமுகம் அடைந்து தடையில்லா செறிவு(Uninterrupted concentration) கிடைக்கும். இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ந்து செய்தால்தான் மனம் ஒரு மனதுடன் கூடும்.

பயிற்சி 5

இந்த பயிற்சிக்கு பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆப்பிள், வாழைப்பழம் அல்லது ஏதேனும் ஒரு பழத்தை உங்கள் உள்ளங்கையில் வைத்து மூடிக் கொள்ளவும். மூடியிருக்கும் உள்ளங்கையில் இருக்கிற பழத்தின் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் உள்ளங்கையில் இருக்கும் பழத்தை பற்றியும் அதன் தன்மையை பற்றியும் மட்டும் நினைத்து பாருங்கள் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்கக் கூடாது.

பழம் எங்கு விளைந்திருக்கும், பழத்தின் சத்து, அதன் பயன்கள் என வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடாமல், பழத்தை மட்டுமே மையமாக நினைத்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். பழத்தின் மீதே உங்கள் கவனம் செலுத்தியபடி இருக்க வேண்டும். பழத்தின் வடிவம், வாசனை, சுவை அந்த பழத்தை பற்றியான உணர்வு உங்களைத் தொட வேண்டும். அப்படி செய்யும்போது உங்கள் மனம் ஒருமுகத்தை அடையும்.

Illustration-of-the-4-Details-Brain-Exercise-thinatamil
Illustration-of-the-4-Details-Brain-Exercise-thinatamil

பயிற்சி 6

பயிற்சி ஐந்தில் மேற்கொண்ட அதே பழங்கள் அடிப்படையிலான பயிற்சியை இங்கும் எடுத்துக்கொள்ளலாம். கண் முன்னே ஒரு பழத்தை வைத்துக்கொண்டு, அந்த பழத்தைப் பற்றி 2 நிமிடம் ஆராய வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு பழத்தின் மணம், சுவை மற்றும் அதை தொடுவது போன்ற உணர்வு அனைத்தும் கற்பனையிலேயே மனதை ஒரு முகப்படுத்தி செய்ய அல்லது முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி கண்ணை மூடி பயிற்சியில் இருக்கும்போது சரியாக பழம் தெரியவில்லை என்றால் கண்ணை திறந்து பழத்தை 2 நிமிடம் பார்த்துவிட்டு மறுபடியும் கண்ணை மூடி பயிற்சியை தொடர வேண்டும். இப்படியாக செய்வதன் மூலம் மனம் ஒருமை பெறும் வழி வகுக்கிறது.

பயிற்சி 7

உங்கள் முன் கரண்டி, முள்கரண்டி அல்லது குவளை ஒன்றை வையுங்கள். இதில் ஏதேனும் ஒரு பொருளின் மீது கவனத்தை செலுத்தி மனதை ஒரு முகப்படுத்தவும். ஒருமுகப்படுத்திய பொருளை பற்றியான சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் அந்த பொருளையே உற்றுப்பார்த்து அதைப்பற்றியே கவனத்துடன் யோசிக்க வேண்டும். அப்படி செய்யும்போது மனது ஒரு முகப்படுத்தப்படும்.

பயிற்சி 8

மேலே குறிப்பிட்ட பயிற்சியில் நீங்கள் தேர்ச்சி அடைந்து விட்டால் அடுத்த பயிற்சிக்கு தயாராகலாம். ஒரு பேப்பர் எடுத்துக் கொள்ளவும். அதில் சின்ன முக்கோணம், சதுரம் அல்லது வட்டம் என 3 அங்குலத்தில் வரைந்துகொள்ள வேண்டும். மூன்று வரைபடங்களையும் உங்களுக்கு பிடித்த வர்ணத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் வரைந்த அந்த படங்களை உங்கள் எதிரே உங்கள் கவனம்படும்படி வைக்க வேண்டும். நீங்கள் வரைபடம் வைத்த இடத்தில் வரைபடம் தவிர்த்து வேறு எதுவும் உங்களுடைய கவனச் சிதறல்கள் ஏற்படும் அல்லது கவனத்தை திசை திருப்பும் வேறு எதுவும் இல்லாமல் தவிர்க்க வேண்டியது அவசியம்.

அதாவது குறிப்பாக வேறு எதுவும் இருக்கக் கூடாது. கண்களுக்கு அந்த வரைபடத்தைப் பார்க்க அதிக கஷ்டம் கொடுக்காமல் 3 வரைபடங்களில் ஏதேனும் ஒன்றில் உங்கள் முழு கவனத்தை செலுத்தி அல்லது வைத்து அதையே பார்த்து பயிற்சி கொடுக்க ேவண்டும். அப்படி செய்யும்போது மனம் முழுவதும் ஒரே நிலையில் வந்து கூடுவதை உங்களால் உணர முடியும்.

பயிற்சி 9

பயிற்சி 8-ல் செய்த அதே பயிற்சியை இங்கும் தொடரவும். அதாவது எந்த வரைபடத்தை நீங்கள் பார்த்தீர்களோ, அதே வரைபடத்தை கண்ணை மூடி பார்த்து பயிற்சி எடுக்க வேண்டும். ஒரு வேளை வரைபடத்தை மறந்துவிட்டால் கண்ணை திறந்து 2 நிமிடம் பார்த்துக் விட்டு, மீண்டும் கண்ணை மூடி வரைபடத்தை கண்முன்னே வைத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், வேறு எந்த தொந்தரவுக்கும் இடம் இல்லாமல் அதை கண்முன்னே நினைத்து பயிற்சியை தொடர்ந்து செய்வதால் கவனச் சிதறல்களைத் தோற்கடிக்க முடியும்.

பயிற்சி 10

பயிற்சி 9-ல் செய்த அதே பயிற்சியை இங்கும் மேற்கொள்ளவும். ஆனால், கண்ணை திறந்து இந்த முறை பயிற்சியை செய்வதால் பலன் கிடைப்பதை உணர்வீர்கள்.

பயிற்சி 11

வேறு எந்த எண்ணங்களும், சிந்தனைகளும் இல்லாமல் குறைந்தது 5 நிமிடமாவது மனதை மௌனமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். குறைந்தது 5 நிமிடமாவது இந்த பயிற்சியை வேறு எந்த எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்காமல் முயற்சி செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட அனைத்து பயிற்சிகளும் சுலபமாக செய்த பிறகு வெற்றி கண்ட பிறகும் இதை தொடர்ந்து செய்ய ேவண்டும். மேலே குறிப்பிட்ட பயிற்சிகள் எடுத்துக் கொள்வதால் உங்கள் எண்ணங்களுக்கும் அமைதியை உணர்வதுடன், கூர்மையான கவனத்துடன் கூடிய மகிழ்ச்சியையும் உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிகையையும் நீங்கள் பெற முடியும்!

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

இன்றைய ராசிபலன் – 19.10.2020

மேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...

தலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...

பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software