மாசி மாதம் கும்பமாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும்.

மாசி 1ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பமாகிறது. மகாவிஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வணங்கலாம். உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். மாசி மாதத்தில் மேஷம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடைபெறும் கல்யாணம் கை கூடி வருமா என்று பார்க்கலாம்.

மாசி மாதம் சூரியன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சமடைந்துள்ளார். சனி மகரத்திலும் மிதுனத்தில் ராகு, செவ்வாய், கேது, குரு தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார்.

கும்பம் ராசியில் புதன் சஞ்சரிக்கிறார்.

கிரகங்களின் ராசி மாற்றம் இந்த மாதம் உள்ளது. கும்பம் ராசியில் உள்ள புதன் 4ஆம் தேதி வக்ரமடைகிறார். சுக்கிரன்16ஆம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார். மாசி 27ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றத்தின்படி மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மாசி மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும். சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் 12ஆம் வீட்டில் உச்சமடைந்துள்ளார். சனி, குரு சஞ்சாரம் சாதகமாக உள்ளது. உங்க ராசி நாதன் 12ஆம் வீட்டை பார்ப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார கஷ்டங்கள் நீங்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் வீட்டு வேலைகளை அற்புதமாக தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். உங்களின் பொருளாதார நிலைமை உயரும். புதிய வேலைகள் தேடி வரும். பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும்.

கோபம் வேண்டாம்

சொந்தங்களின் மூலம் நல்ல செய்தி தேடி வரும். இளைய சகோதரர்கள் மூலம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்க. புதனால் யோகம் வரும். மாணவர்களுக்கு யோகமான மாதம் நினைவாற்றல் அதிகமாகும். தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். நரம்பு பிரச்சினைகள் வரலாம் அதிகம் கோபப்பட வேண்டாம். உணர்ச்சி வசப்பட வேண்டாம். இந்த மாதம் குலதெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். சிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்று வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களுக்கு நல்ல வேலையை கொடுப்பார். அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் கவனமாக பேசுங்கள். சிலருக்கு மனக்கஷ்டங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் வரலாம். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். ராகு உங்களுக்கு நல்ல வழிகளை காட்டுவார் வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். ராசிக்கு 11ஆம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

தடைகள் நீங்கும்

மனைவியால் யோகம் வரும். திருமணம் ஆகாமல் காத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு திருமண தடைகள் நீங்கும் நல்ல வரன் அமையும். மூத்த சகோதரர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. பணம் யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் வண்டிகளில் போகும் போது கவனம். எலுமிச்சையை கைகளில் வைத்துக்கொண்டிருங்கள். வாரம் ஒருமுறை ஆஞ்சநேயரை வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.