மாலியில் (Mali) மூன்று பிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகையின் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒரு இராணுவ நடவடிக்கையின் போது, இவர்களின் கவசவாகனத்தின் மீதான வெடிகுண்டுத் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Thierville-sur-Meuse (Meuse) இன் முதலாம் தேடுதல் மற்றும் தாக்குதற் இந்தப் படையணியின் (1er régiment de chasseurs) வீர்களளே கொல்லப்பட்டுள்ளனர்.
Serval மற்றும் Barkhane நடவடிக்கைகளில் இதுவரை இந்தப் படையணியின் 47 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களிற்கான வீரவணக்கத்தைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், இவர்களின் தியகத்திற்குத் தலைவணங்குவதுடன், இவர்களின் குடும்பத்திற்குத் தன் ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.