பிரித்தானியாவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிரித்தானிய லொறிகள் பிரான்சுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதால் இருபக்கங்களிலும் ஏழு மைல் தூரத்துக்கு லொறிகள் காத்து நிற்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
இதனால் உணவுப்பற்றாக்குறை ஏற்படலாம் என உணவுத்துறையில் உள்ளவர்கள் எச்சரிக்க, பதறிய பிரித்தானியர்கள் அதிகாலையிலேயே பல்பொருள் அங்காடிகள் முன் திரண்டதோடு ஷெல்ப்களையும் காலி செய்தனர்.
இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் என்ற செய்தியும் திகிலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்னும் சில மணி நேரத்திற்குள் இது தொடர்பாக ஒரு நல்ல முடிவெடுக்க இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
Credit: (c) UkNewsinPictures
அதாவது பிரித்தானிய லொறிகள் பிரான்சுக்குள் வர விதிக்கப்பட்டிருந்த தடை இன்னும் சில மணி நேரத்திற்குள் நீக்கப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Jean-Baptiste Djebbari, இன்னும் சில மணி நேரத்தில், பிரித்தானியாவிலிருந்து போக்குவரத்து மீண்டும் தொடரும் வகையில் ஐரோப்பிய பக்கத்தில் நாங்கள் மருத்துவ கொள்கை ஒன்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
எங்களைப் பொருத்தவரை எங்கள் குடிமக்களையும் பாதுகாப்போம், சக நாட்டு குடிமக்களையும் பாதுகாப்போம் என்று கூறியுள்ளார் அவர்.
இதற்கிடையில், பிரான்சிலிருந்து இன்னமும் லொறிகள் தொடர்ந்து Dover துறைமுகத்துக்குள் வந்துகொண்டிருப்பதை துறைமுக அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.
Credit: London News Pictures
Credit: (c) UkNewsinPictures