Friday, August 7, 2020
Home தொழில்நுட்பம் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்

மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ் என இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் ஆப்பிள் விண்ணப்பித்திருக்கும் படிவத்தில் ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. காப்புரிமை விண்ணப்பத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கீல் (ஹின்ஜ்) வடிவமைப்பு பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

அதன்படி மடிக்கக்கூடிய ஐபோனில் கீல் மூலம் மடங்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை சிறிதளவு சூடாக வைக்க சாதனத்தின் உள்புறம் சூடேற்றும் அமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் டிஸ்ப்ளேக்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

- Advertisement -

குளிர்ச்சியாக இருக்கும் நிலையில் டிஸ்ப்ளேக்கள் மடிக்கப்படும் போது அவை உடையாமல் இருக்க அவை சிறிதளவு சூடேற்றப்படும் என ஆப்பிள் காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. மடிக்கக்கூடிய பகுதி இலுமினேட்டிங் பிக்சல்கள் மூலம் தானாக சூடேற்றப்படும் என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

காப்புரிமை விண்ணப்பத்தில் இருக்கும் வடிவமைப்பு ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோனில் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகி இருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தை ஆப்பிள் டிசம்பர் 2017 இல் சமர்பித்து இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய ஐபோனினை 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisment -

ஏனைய செய்திகள்

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?- அதனால் எதுவும் பிரச்சனை வருமா?

ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சனி பகவான்ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம், பிறருடைய...

சூப்பரான காரசாரமான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்..

நாட்டுக்கோழியில் சூப்பரான காரசாரமான கொத்துக்கறி மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ ...

தமிழர்களே இனி இந்த பிழையை செய்யதீர்கள்! வேஸ்ட்டென தூக்கிவீசும் நீரில் இவ்வளவு...

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் முக்கிய காரணமாக அரிசி கஞ்சி தான் இருந்தது. தற்போது இதனை அரிசி நீர் என்று அழைக்கப்படுகிறது. நாம் அதிக வெப்பநிலையில் அரிசியை தண்ணீரில் சமைக்கும்போது, ​​அதில் சிறிது அளவு மாவுச்சத்தை...

இது என்னடா பாகுபலிக்கு வந்த சோதனை.. வனிதாவின் புகைப்படத்திற்கு வைச்சு செய்த...

வனிதா பீட்டர் பால் திருமண விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருமணம் குறித்து பேசியவர்களை எல்லாம் சரமாரியாக விளாசி தள்ளினார் வனிதா. நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி,...

தினமும் நண்டு சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும்?

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கிறது. நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிக மிக குறைவாக...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline