ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டால் அதிக இழப்பு உங்களுக்குத்தான், எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார் பிரான்ஸ் நிதித்துறை அமைச்சர்.
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஆணையத்துக்கும் இடையில் பிரெக்சிட் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், பிரான்ஸ் நிதித்துறை அமைச்சரான Bruno Le Maire இவ்வாறு கூறியுள்ளார்.
பிரான்ஸ் அரசின் கணிப்பின்படி, உலகின் மற்ற நாடுகளுடன் பிரான்ஸ் செய்யும் வர்த்தகத்தை ஒப்பிட்டால், பிரெக்சிட்டால், 2021இல் பிரான்சின் ஜி.டி.பி, (GDP) 0.1 சதவிகிதம் மட்டுமே குறையும் என்கிறார் அவர்.
பிரெக்சிட் என்பது ஒரு பைத்தியக்காரத்தனம் என்று கூறியுள்ள Bruno Le Maire, எனது பிரித்தானிய நண்பர்கள் அதற்கான விலையை செலுத்தப்போகிறார்கள் என்பதால், அதற்காக வருந்துகிறேன், அவர்கள் பொய்களுக்கான விலையை செலுத்தப்போகிறார்கள் என்கிறார்.
AFP