fbpx
Thursday, February 25, 2021
Home செய்திகள் பிரான்ஸ் முழுவதும் பயங்கர தாக்குதல்களை நடத்த சதிதிட்டமிட்ட குழு! உண்மையை ஒப்புக்கொண்ட நபர் கூறிய திடுக்கிடும்...

பிரான்ஸ் முழுவதும் பயங்கர தாக்குதல்களை நடத்த சதிதிட்டமிட்ட குழு! உண்மையை ஒப்புக்கொண்ட நபர் கூறிய திடுக்கிடும் தகவல்!

பிரான்ஸ் முழுவதும் பயங்கர தாக்குதல்களை நடத்த சதிதிட்டமிட்ட ‘வன்முறைவாத தீவிர இடதுசாரி ஆர்வலர்கள் குழு’ கைது செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் உள்துறை அமைச்சர் Gerald Darmanin அறிவித்துள்ளார்.

 

பிரான்ஸில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளை நடத்தவும், நகரங்களின் தெருக்களில் பயங்கர தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டதாகக் கூறப்படும் தீவிர இடதுசாரி குழுவைச் சேர்ந்த 7 பேரை அதிகாரிகள் கைது செய்ததாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

- Advertisement -

 

- Advertisement -

இந்த குழு பொலிஸ் படைகளையும் தாக்க திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Vitry-sur-Seine, Toulouse and Cubjac ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அதில் இருவர் விடுவிக்கப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

 

கைது செய்யப்பட்டவர்களில் குழுவின் தலைவரும் அடங்குவர், அக்குழுவின் தலைவர் Florian D என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Florian D, 2017ல் சிரியாவின் ரோஜாவாவில் குர்திஷ் படைகளுக்காக 10 மாதங்கள் போராடியதாகவும், 2018 ஜனவரியில் பிரான்சுக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

 

‘பயங்கரவாத குழுவை’ உருவாக்கியதாக சந்தேகித்து, Florian D நடவடிக்கைகளை பொலிசார் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

Florian D, பிரான்சில் ‘கெரில்லா நடவடிக்கைகளை’ மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ‘anarchist’ என்று பிரான்ஸ் ஊடகங்கள் விவரித்துள்ளது.

கைது செய்யப்பட்டபோது, பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பொலிசார் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது, இதில் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வேட்டை துப்பாக்கிகள் மற்றும் கத்தி ஆகியவை அடங்கும்.

 

வெடிபொருட்கள், ரசாயனங்கள் மற்றும் வெடிகுண்டுகளை உருவாக்க பயன்படுத்தக்கூடிய பாகங்கள், வன்முறையின் போது பொலிஸ் பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவை சோதனையில் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

 

அந்த குழு ஆயுதங்கள் மற்றும் பொலிஸ் உபகரணங்களை எங்கிருந்து பெற்றார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கைது செய்யப்பட்ட 6 பேரை காவலில் வைத்து விசாரிக்க பிரான்ஸ் நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

 

குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், பிரான்சில் சட்ட அமலாக்கத்திற்கும் இராணுவத்திற்கும் எதிரான தாக்குதல்களைத் நடத்த திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டதாக Le Parisien செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

 

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software