கிறிஸ்மஸுக்கு முன்னதாக தங்கள் குடும்பங்கள் சுயமாக தனிமைப்படுத்த விரும்பினால், பிரான்சில் உள்ள பள்ளி குழந்தைகள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வகுப்புகளைத் தவிர்த்து, வீட்டில் தங்கலாம் என்று பிரான்ஸ் அனுமதியளித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள், வயதான உறவினர்கள் போன்றவர்களுக்கு விருந்தளிக்க திட்டமிட்ட குடும்பங்கள், முடிந்தால் ஒரு வாரத்திற்கு முன்பே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கொரோனா குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
கல்வி பருவக்காலத்தின் கடைசி இரண்டு நாட்கள் விடுமுறை எடுக்கும் மாணவர்களை பள்ளிகள் தண்டிக்கக் கூடாது என்று மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
மருத்துவ கவுன்சிலின் இந்த பரிந்துரையை நிச்சியமாக ஆதரிப்பதாக பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பிரான்ஸில் தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் சினிமாக்கள் மீண்டும் திறப்பது தாமதப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.