புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் இளம்பெண் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்த பெண் யார் தெரியுமா? அந்த பெண்ணின் பெயர் Hayat Boumeddiene! சமீபத்தில் பிரான்சில் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்று ஆசிரியர் Samuel Paty கொல்லப்படுவதற்கு காரணமான கார்ட்டூன்களை வெளியிட்டதற்காக 2015ஆம் ஆண்டு சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கொலை வெறியாட்டம் நடந்தி 17 பேரை கொன்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட நபர் Amedy Coulibaly.
அந்த Amedy Coulibalyயின் காதலிதான் இந்த Hayat. அந்த கொலைவெறித்தாக்குதல் தொடர்பாக 14 பேர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
மூன்று பேர் தலைமறைவாகிவிட்ட நிலையிலும், அவர்கள் இல்லாமலே அவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்துவருகிறது. அவர்களில் ஒருவர்தான் இந்த Hayat.
alchetron.
பிரான்ஸ் நாட்டு தீவிரவாத எதிர்ப்பு விசாரணை அதிகாரிகள், Hayatக்கு அதிக பட்ச தண்டனையாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என்றும், குறைந்தது 20 ஆண்டுகளுக்காவது அவரை வெளியே விடாது என்றும் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
அனால், Hayat உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. பிரான்சிலிருந்து சிரியாவுக்கு ஓடிப்போன Hayat, ஆயுதங்களை வாங்க பல்வேறு முறைமைகளை பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்க வான்வழித் தாக்குதல் ஒன்றில் Hayat இறந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியான நிலையில், பெண் ஜிகாதி ஒருவர், Hayat கடந்த ஆண்டு முகாம் ஒன்றிலிருந்து தப்பியோடி விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆகவேதான் பிரான்ஸ் பொலிசார் அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள். Hayat, பிரான்ஸால் அதிகம் தேடப்படும் பெண் என்று என அவரை உள்ளூர் ஊடகங்கள் வர்ணிக்க ஆயுதம் தாங்கிய மிக பயங்கரமான பெண் என பிரெஞ்சு பொலிசார் அவரை வர்ணிக்கிறார்கள்.
alchetron.
alchetron.