பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் கோரிக்கையை G7 நாடுகள் செவி சாய்த்துள்ளன.
கடந்த வெள்ளிக் கிழமை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக G7 அமைப்பைச் சேர்ந்த ஏழு நாடுகளின் ஜனாதிபதிகளும் உரையாடினர்.
அதில், ஆப்பிரிக்க வறுமை நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக உரையாடினார்கள். குறிப்பாக கொரோனா வைரசில் இருந்து இந்த வறுமை நாடுகள் தங்களை காத்துக்கொள்ளவும், தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும் இந்த உரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.
மொத்தமாக 7.5 பில்லியன் யூரோக்களை வழங்க இந்த G7 நாடுகள் சம்மதித்துள்ளன.
இந்த கோரிக்கையை முதலில் வைத்தது ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் ஆவார். நிதி உதவி அல்லது தாம் பெற்றுக்கொள்ளும் தடுப்பூசிகளில் 5 சதவீதமானவையை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்க வேண்டும் என மேக்ரான் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.