பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.
உலகில் தங்கள் நாட்டு மக்களுக்கு அந்நாட்டு தலைவர்கள் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
அப்போது, பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதமான Marseillaise பாடல் பின்னணியில் ஒலித்தது. இந்த தேசிய கீதம் பாடலாக இல்லாமல் வயலின் இசைக்கருவியில் வாசிக்கப்பட்டது.
அது தற்போது சர்ச்சையாகியுள்ளது. வழக்கம் போல் தேசியம் கீதம் பாடமல். வயலின் கருவி ஊடாக இசைக்கப்பட்டது ஏன் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னர், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஆசிரியர் Samuel Paty இன் இறுதிச் சடங்கின் போதும் தேசிய கீதம் வயலின் கருவியில் வாசிக்கப்பட்டது. இந்த புதுவருடம் அவரின் நினைவுகளுடன் ஆரம்பித்துள்ளதாகவும் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.