பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகளால் அதிகம் தேடப்படும் இளம்பெண் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பிரான்ஸ் நீதிமன்றம்.
சமீபத்தில் பிரான்சில் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்று ஆசிரியர் Samuel Paty கொல்லப்படுவதற்கு காரணமான கார்ட்டூன்களை வெளியிட்டதற்காக, 2015ஆம் ஆண்டு சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கொலை வெறியாட்டம் நடந்தி 17 பேரை கொன்ற கும்பலுடன் தொடர்புடைய முக்கிய நபர் Amedy Coulibaly.
அந்த அந்த Amedy Coulibalyயின் காதலிதான் இந்த பெண், அவரது பெயர் Hayat Boumeddiene (32). அந்த கொலைவெறித்தாக்குதல் தொடர்பாக 14 பேர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
மூன்று பேர் தலைமறைவாகிவிட்ட நிலையிலும், அவர்கள் இல்லாமலே அவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்துவருகிறது.
அவர்களில் ஒருவர்தான் இந்த Hayat. இந்நிலையில், Hayatக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 20 ஆண்டுகள் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்படுவார்.
உண்மையில் Hayat பிரான்சில் இல்லை, அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. அவர் இல்லாமலேதான் வழக்கும் நடந்தது, தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அவர் பிரான்சுக்கு திரும்பும்பட்சத்தில், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். மூன்று மாதங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாகவும் Hayat மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.