பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று உணவக உரிமையாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உணவகங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. ஆனால், உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கவேண்டும் உரிமையாளர்கள் பலர் தொட்ரந்து கூறி வந்தனர்.
அரசு எந்த ஒரு தெளிவான பதிலும் கூறாததால், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பகல் 1 மணிக்கு Place des Invalides பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
உணவக உரிமையாளர்கள் மற்றும் தேநீர் விடுதி உரிமையாளர்கள் என மொத்தம் 2,000 பேர் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து உணவகங்களும் ஜனவரி 20-ஆம் திகதியே திறக்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் ,மேக்ரோன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, கிருஸ்மஸ் கால விடுமுறையின் போது தங்களது உணவங்களை திறக்க அனுமதி கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாங்கள் பணிக்குச் செல்வோம். ஏனென்றால் நாங்கள் அத்தியாவசியமானவர்கள்,என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்