பிரான்சில் 300 சிறார்களை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த 70 வயது மருத்துவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தற்போது 4 வழக்குகளில் மட்டும் அவர் குற்றவாளி என தீர்ப்பாகியுள்ளது.
ஆனால் 1986 முதல் 2014 வரை சுமார் 312 சிறார்களை அவர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கினார் என்று தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது, சட்டத்தரணிகள் Joel Le Scouarnec என்ற அந்த மருத்துவருக்கு சொந்தமான டைரிகளைக் கண்டுபிடித்தனர், அதில் அவர் குழந்தைகளுடன் தமக்கிருக்கும் பாலியல் உணர்வுகளை காட்சிகளாக பதிவு செய்திருந்தார்.
ஆனால் அது ஒன்றும் தவறில்லை எனவும், ஒருவகையான உணர்வு மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.
தன்மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை காலகட்டத்தில் ஒப்புக்கொண்ட மருத்துவர் Joel Le Scouarnec, சமூகத்தில் மதிப்புமிக்க மருத்துவராக வலம் வந்தவர் என கூறப்படுகிறது.
தற்போது அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், மேலும் அவர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் இருந்து எவ்வித சலுகையும் தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.