பிரான்சில் குறிப்பிட்ட 24 மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள தகவலிடன், 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கையும், மேலும் 4 மாவட்டங்களுக்கு பலத்த புயல் காற்று எச்சரிக்கையும் என மொத்தம் 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள மாவட்டங்கள்
Eure Seine-Maritime Oise Val-d’Oise Yvelines Meurthe-et-Moselle Vosges Haute-Saône Doubs Jura Ain Pas-de Calais Nord Bas-Rhin Landes Girond Haut-Rhin
பனிச்சரிவு எச்சரிக்கை உள்ள மாவட்டங்கள்
- Isère,
- Savoie,
- Haute-Savoie