பிரான்சில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்று மிக அதிகம் ஆகும் ஆபத்து இருப்பதாக, சுகாதார நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் தீவிரமாகி வருவதால், அது மூன்றாம் கட்ட நிலையை அடைந்து விடக் கூடாது என்பதற்காக, நாட்டில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு வரும் 15-ஆம் திகதி அமுலில் வரவுள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி வரும் மக்களுக்கு கடும் அபாரதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது கடந்த நான்கு வாரங்களாகத் தொற்று வீதம் கணிசமாகக் குறைந்து வந்துள்ளது.
கடந்த நவம்பர் 30-ஆம் திகதி முதல் டிசம்பர் முதல் வாரத்திற்குள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 72121-ஆக இருந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இது 76,500-ஆக இருந்துள்ளது.
ஆனால் கொண்டாட்டக் காலங்களில், மக்களின் அவதானமின்மையாலும், எச்சரிக்கையின்மையாலும் தொற்றுக்கள் அதியுச்சமாக அதிகரிக்கும் என்றும் பிரான்சின் பொதுமக்கள் சுகாதார நிறுவனமான Santé publique France எச்சரித்துள்ளது.
இதனால் மக்கள் வெளியில் செல்லும் பாதுகாப்பு கவசம் என்று கூறப்படும், முகக்கவசத்தை கட்டாயமாக பயன்படுத்தும் படியும், அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.