பிரான்சில் போதை பொருள் கடத்தலுகுகு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
போதை பொருள் கட்த்தலை முடிவுக்கு கொண்டு பிரான்சில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதங்களில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சராக தாம் பொறுப்பேற்ற பின், இதுவரை 3,952 போதைப்பொருள் விற்பனை இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் பிடிக்க வேண்டும். நான் இது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் தொடர்புகொண்டு விசாரிப்பேன் என Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் அதிகம் விற்பனையாகும் மாவட்டங்களில் Seine-Saint-Denis மாவட்டமே முன்னிலையில் உள்ளது. இங்கு இதுவரை 276 போதைப்பொருள் விற்பனை இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.