பிரான்சில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து, சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் பாது கலேயின் Lens நகரில் இருக்கும் rue du Stade வீதியில் உள்ள வீடு ஒன்று திறக்கப்படாமலே இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்துகடந்த செவ்வாய் கிழமை விரைந்து வந்த பொலிசார், வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால், வெகு நேரமாக யாரும் திறக்காத காரணத்தினால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது, வீட்டின் தரையில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இறந்த நிலையிலும், வீட்டின் அறை ஒன்றில் உள்ள படுக்கை அறையில் 15 வயதுடைய சிறுவன் ஒருவனின் சடலமும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், வீட்டில் ஏதேனும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதா? என்பதற்கான ஆதாரங்களை பொலிசார் தேடிய போது, எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காததால், பிரேதபரிசோதனை முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க எங்களுடன் இணையுங்கள்.