பிரான்சில் நாளை முதல் மாலை 6 மணி ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதால், அதற்கான அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் தரவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகவும், பிரான்சில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நாளை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.
இந்த ஊரடங்கு நடமுறையில் இருக்கும் 12 மணிநேரங்களில் (மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை) வெளியில் பயணிப்பதற்கு அனுமதி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நேரத்தில் போதிய அனுமதி பத்திரம் இன்றி பயணிப்போருக்கு 135 யூரோ அபராதமும், அடுத்த 15 நாட்களுக்குள் இரண்டாம் முறை மீறுவோருக்கு 200 யூரோ அபராதமும், அடுத்த 30 நாட்களுக்குள் அதே தவறை மீண்டும் செய்தால் 3,750 யூரோ அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊரடங்கு நேரத்தில் நீங்கள் வெளியே பயணிக்க அத்தியாவசியமான அனுமதி சான்றிதழை அரசு வெளியிட்டுள்ளது. புதிய அனுமதி சான்றிதழைப் பெற இந்த https://mobile.interieur.gouv.fr/Actualites/L-actu-du-Ministere/Attestations-de-deplacement-couvre-feu லிங்கை க்ளிக் செய்யவும்.