பிரான்சில் மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் யூத பள்ளிக்குள் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Marseille நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது, நகரின் 13th arrondissement பகுதியில் உள்ள யூத பள்ளிக்குள் கத்தியுடன் மர்ம நபர் நுழைய முயன்றுள்ளான்.
பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் மர்ம நபரை தடுத்த நிலையில் அவன் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்குள் ஓடியுள்ளான்.
உடனே மர்ம நபர் குறித்து பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார மர்ம நபரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து, உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பை அதிகாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் யார், அவனது நோக்கம் என்ன, ஏதற்காக அவர் அச்செயலில் ஈடுபட்டான் போன்ற விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.