பிரான்சில் பொலிஸார் மீது வாகனம் மோதியதால், அவர் படுகாயமடைந்த நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சின் Dijon நகரில் இருக்கும் Pouilly-en-Auxois பகுதியில் கண்காணிப்பில் இருக்கும் பொலிசாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை மீறி நிற்காமல் செல்வதாகவும், அதை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, சில நிமிடங்களில் அப்பகுதியில் அடையாளம் தெரிவிக்கப்பட்ட குறித்த வாகனம் மிக வேகமாக வந்துள்ளது. பின்னால் வாகனத்தை துரத்திக்கொண்டு பொலிசார் சென்றுள்ளனர்.
இரு படைப்பிரிவினரும் இணைந்து குறித்த வாகனத்தை நிறுத்தியுள்ளனர். முன் பக்கம் அதிகாரிகளும், பின்னால் பொலிசாரும் நிற்க, காரில் இருந்த டிரைவர் தனது காரை பின்னால் எடுத்துள்ளான்.
இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தூக்கி எறியப்பட்டு, படுகாயமடைந்தார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த வாகனத்தை அதிகாரிகள் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர். அதன் பின் டிரைவர் கைது செய்த அதிகாரிகள், அவனிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை எனவும், மது அருந்தியிருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
காயமடைந்த பொலிசாருக்கு 10 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்