பிரான்சில் சிறுவன் ஒருவன், உயிரிழந்த தாயின் சடலத்துட்ன 15 நாட்கள் வசித்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பிரான்சின் பாதுகலேயில் வசிக்கும் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் அவசர உதவி எண் மூலம் உதவிக்குழுவை அழைத்துள்ளான்.
தனது தாய் கட்டிலில் இருந்து எழுந்திருக்கவில்லை, பல முறை எழுப்பியும் அவர் எழுந்திருக்காமல் உள்ளார், பயமாக உள்ளது என்று போனில் உதவிக்குழுவிடம் கூறியுள்ளான்.
இதையடுத்து உதவிக்குழுவினர் அந்த சிறுவன் இருக்கும் வீட்டின் முகவரியை சரியாகப் பெற்று, அங்கு விரைந்துள்ளனர்.
வீட்டின் உள்ளே சென்ற உதவிக் குழுவினர், சிறுவன் அருகே இருக்கும் தாயின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில், அவர் இறந்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் சிறுவன் அது தெரியாமல் தாய் எழுந்திருக்கவே இல்லை என்ற எண்ணத்தில் இருந்துள்ளான்.
இதையத்து, சடலத்தை கைப்பற்றிய அவர்கள், பிரேத பரிசோதனைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பிரேதபரிசோதனையின் முடிவு வந்த பின்னரே இது கொலையா? தற்கொலையா? இயற்கை மரணமா என்பதை தீர்மானிக்க முடியும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும், அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் பெண் உயிரிழந்து 15 நாட்கள் இருந்திருக்கும் எனவும், அது தெரியாமல் சிறுவன் தாயின் சடலத்துடன் 15 நாட்கள் வாழ்ந்து வந்துள்ளான் என்று குறிப்பிட்டுள்ளது.