பிரான்சில் வெளியில் செல்வதற்கு புதிய அனுமதி பத்திரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்து பிரான்சில் இன்று முதல் இரண்டாம் கட்ட உள்ளிருப்பில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும், வெளியில் செல்லும் போது அனுமதி பத்திரம் கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய ஆவணங்கள் மற்றும் அனுமதி பத்திரம் இல்லையென்றால் 135 யூரோக்கள் அபராதமும், அடுத்த 15 நாட்களுக்குள் அதே தவறை மீண்டும் செய்தால் இம்முறை 200 யூரோக்களும், அதன் பின்னரும் அதே தவறை மீண்டும் செய்தால் 3,750 யூரோக்கள் தண்டப்பணமும், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்