பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்கு பின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்பு நிலவியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் இன்னும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது தவிர, கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
அதுமட்டுமின்றி இப்போது பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த ஆண்டில் ஆவது, இந்த கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருமா என்கிற நிலையில், இது தொடரலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், பிரான்சின் மருத்துவத் துறையில் இருப்பவர்கள், மூன்று வாரம் முழு உள்ளிருப்பு முடக்கம் தேவை என்று கூறுகின்றனர்.
அரசாங்கத்தில், பிராந்தியவாரியான உள்ளிருப்பிற்கும் சாத்தியம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிகத் தொற்று உள்ள பிராந்தியங்களை முடக்கி, பிராந்தியங்களிற்கு இடையிலான போக்குவரத்துக்களைத் துண்டிப்பதன் மூலம், தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மூன்றாவதாக, ஊரடங்கை நீட்டித்து, மேலும் அதிகநேரம் ஊரடங்கை அறிவித்து, கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா? எனவும் உணவகங்கள், மதுச்சாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தியைரங்குகள் போன்றவற்றைத் திறப்பது தள்ளிப் போகலாம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.