பிரான்சில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இங்கு கொரோனா வைரஸ் காரணமாக 75-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை பிரான்சில், கட்டுப்படுத்தாவிட்டால், பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் கூறுகையில், ஐரோப்பா அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்தவர்களில் அவசியமான பயணம் மேற்கொள்பவர்களுக்கே அனுமதி வழங்கப்படும். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.