பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீரா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
அதற்கான ஆதாரமாக தற்போது இணையங்களில் புகைப்படங்களும் உலாக தொடங்கி விட்டது.
இதனால், பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், தற்போது, மீரா வெளியேற்றப்பட வில்லை என்றும் சீக்ரேட் ரூமில் வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முதன் முறையாக சீக்ரேட் ரூமை காண்பித்தார்.
எனவே, மீரா சீக்ரேட் ரூமில் வைக்கப்படுவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமே மீரா தான் தற்போது பிக் பாஸ் வீட்டில் கண்டன்ட்களை கொடுத்து வருகிறார். ஒருவேளை இவர் சென்றுவிட்டால் நிகழ்ச்சியில் ஸ்வாரசியமே இருக்காது என்பதால் சென்றுவிட்டால் சீக்ரேட் ரூமில் வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்திருந்து பார்ப்போம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்று என்ன திருப்பம் காத்திருக்கின்றது என்று.