பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் முதல் வாரத்தில் ஃபாத்திமா பாபு, இரண்டாவது வாரம் வனிதா என இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் எவிக்ட் செய்வதற்காக அபிராமி, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தவாரம், மோகன் வைத்யா தான் கண்டிப்பாக வெளியேற வேண்டும், அவர் வயதுமீறிய செயல்களை செய்து வருகிறார். அவர் செய்யும் செயல்கள் மிகவும் ஆபாசமாக உள்ளது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துகொண்டே வருகிறது.
அந்த வகையில், இந்த வாரத்தின் ஓட்டு நிலவரப்படி மோகன் வைத்யா தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால், இந்த வாரம் மோகன் வைத்யா கட்டாயம் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.