Saturday, July 24, 2021

பிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்

- Advertisement -
- Advertisement -

இளம் வீரர்களிடம் “ஸ்பார்க்” இல்லை என்ற தோனியின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சிஎஸ்கே வீரர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்ச்சி கண்ட ஒரே தொடர் என்றால் அது 2020 சீரிஸ் தான். ஐக்கிய அரேபியா அமீரகத்தில் நடந்த இத்தொடரில் சிஎஸ்கே 7வது இடத்தைப் பிடித்து வெளியேறியது. ஒருவழியா மனசு வந்தாச்சு! 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகள்.. பிசிசிஐ அறிவிப்பு தோனியின் மஞ்சள் ஆர்மி பிளே ஆஃப் செல்லாத ஒரே தொடர் இதுதான். தோனி மட்டுமல்ல, அணியில் ஒரு வீரரால் கூட நினைத்தது போல் விளையாட முடியாமல் பரிதாபமாக வெளியேற்றப்பட்டது சிஎஸ்கே.

தீப்பொறி தொடர் தோல்விகளால் ஏற்கனவே நொந்துபோயிருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கும், எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது கேப்டன் தோனியின் வார்த்தை. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பேட்டியளித்த தோனி, “இளைஞர்களுக்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஒருவேளை அவர்கள் எங்களுக்கு வழங்கிய தீப்பொறியை நாங்கள் கண்டறியவில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார். தொடர்ந்து அரைசதம் இதையடுத்து, சமூக தளம் முழுக்க தோனியை அவரது ரசிகர்களே விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

- Advertisement -

அணியில் யாருக்குமே வாய்ப்பு தராமல், எப்படி ‘இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை’ என்று தோனி கூறலாம் என்று விமர்சனங்களை முன்வைத்தனர். அதன் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம் கிடைக்க அவர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்து அசத்த, தோனி மீதான விமர்சனம் மேலும் வலுத்தது. நன்றாக விளையாடினோம் இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான என்.ஜெகதீசன் அளித்துள்ள பேட்டியில், “அவர் (தோனி) உண்மையில் சொன்னது பத்திரிகைகளால் முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது இது இளம் வீரர்களைப் பற்றியதல்ல, உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ருதுவும் நானும் நன்றாகச் செயல்பட்டோம்.

தட்டியெழுப்பினார் மூத்த வீரர்கள் உட்பட அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் தட்டியெழுப்பவே தோனி அவ்வாறு பேசினார். இதை எவரும் புரிந்து கொள்ளவில்லை. அணியில் இத்தனை தலைசிறந்த வீரர்கள் இருக்கையில், நீங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு பெயரை சொல்லி கருத்து சொல்ல முடியாது. தோனியின் அந்த கருத்துக்கு பிறகு, நாங்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினோம், அணியும் நன்றாக விளையாடியது” என்றார். பேட்டிங்கில் மாஸ் எனினும், சிஎஸ்கே அணி 2021 சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

- Advertisement -

தோற்ற இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது. மும்பை போட்டியில் கூட, கடைசி பந்தில், சென்னை தோல்வி அடைந்தது. மற்றபடி, இம்முறை கோப்பையை வெல்லும் அனைத்து பொருத்தமும் நிரம்பிய ஒரே அணியாக சிஎஸ்கே வலம் வந்தது எனலாம். தோனி பிளான் அதுமட்டுமின்றி, ‘பிகில்’ படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருப்பார்.

அதில், அவரது அணி வீராங்கனைகள் சொதப்ப.. போட்டி இடைவெளியின் போது, அவர்களை கடுமையாக விமர்சித்துப் பேசுவார். இதனால் வெகுண்டெழும் வீராங்கனைகள் இடைவேளைக்கு பிறகு பின்னிப் பெடலெடுப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இங்கே தோனியும் “ஸ்பார்க்” என்ற ஒற்றை வார்த்தை மூலம், அதே ஃபார்முலாவை பயன்படுத்தி, ஜுனியர், சீனியர்ஸ் என்று அனைவரையும் பொங்கியெழ வைத்துவிட்டதாக ரசிகர்கள் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -
Latest news
- Advertisement -
Related news