பிரான்சின் பாரிஸ் நகரில் தீவிரவாதியால் கழுத்து துண்டாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு, இன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடந்த இந்த கொடூர சம்பவத்தை, தாக்குதல்தாரி காணொளியாக பதிவு செய்து, அதை ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டையே மொத்தமாக உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர்புடைய 18 வயது இளைஞர் அன்சோரோவ், சம்பவயிடத்திலேயே பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
47 வயதான சாமுவேல் பாட்டி, நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை தமது பாடசாலை மாணாக்கர்களிடம் காட்டியதாலையே அவர் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
படுகொலைக்கு பின்னர், தாக்குதல்தாரி அன்சோரோவ், ஐ.எஸ் ஆதரவு குழுக்களில் குறித்த சம்பவத்தை புகைப்படமாகவும், காணொளியாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதனிடையே கொல்லப்பட்ட ஆசிரியர் சாமுவேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல நகரங்களிலும், பொதுமக்கள் திரண்டு கொல்லப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பாரிஸ் மட்டுமின்றி Lyon, Strasbourg, Nantes, Marseille மற்றும் Bordeaux உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.