மூன்று வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தாங்கள் புனிதமானதாக கருதும் வனத்தைக் காக்க, இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என அமேசானின் முரா பழங்குடியினர் உறுதிபூண்டுள்ளனர்.
அமேசான் காடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க பிரேசில் அரசு போராடி வருகிறது.
கால்நடைப் பண்ணைகள் வைத்திருப்பவர்களும், மரம் வெட்டுபவர்களும் தங்களது சுயநலத்திற்காக வைக்கும் தீ தான் அமேசான் காடுகளை அழித்து வருகிறது.
காட்டுத் தீயை அணைக்க மதிநுட்பங்களுடன் செயல்பட்டு வரும் பிரேசிலின் பழங்குடி மக்கள், கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை போராடி தீயை அணைப்போம் என உறுதி பூண்டுள்ளனர்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில், பழங்குடி பெண் ஒருவர் காட்டுப் பன்றியின் குட்டிகளுக்கே பாலூட்டி பசியை போக்கியுள்ளனர். அப்படிப்பட்ட மக்கள் தமது காடு அழிவதைக்கண்டு எப்படியெல்லாம் கதறியிருப்பார்கள்.
மனித நேயம் படைத்த ஒரு இனம் அழிவதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. பலர் அவர்களை காக்க போராடிக் கொண்டிருக்கின்றனர். குறித்த புகைப்படம் அவர்கள் பிற உயிர்கள் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துகின்றது.