நீலாம்பரி நடிகர் ரஜினிகாந்துக்கு ரம்யா கிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி ரஜினிக்கு தெரிவித்த வாழ்த்து பதிவில், அன்புள்ள ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் உடன் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து பதிவில், “எனக்கு எப்பவும் விருப்பமான படையப்பா ரஜினிகாந்த்துக்கு உங்களின் நிலாம்பரியிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
167 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து கலைச்சேவை ஆற்றியதற்காக பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை பெற்றுள்ளதோடு, 45 ஆண்டுகள் திரை உலகில் கடந்துவிட்டாலும் ரஜினியின் 168 வது திரைப்படமான அண்ணாத்த திரைப்படத்திற்கும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுவதே அவரின் திரை ஆளுமைக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு டிசம்பர் 15-ம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருக்கிறது. ஏற்கெனவே 60% படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் நிலையில் டிசம்பர் இறுதிக்குள் ரஜினிகாந்த் தனது காட்சிகளை முடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 31-ம் தேதி தன்னுடைய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதற்குள் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.