Thursday, April 2, 2020

நாம் தினம் பூசும் விபூதிக்கும் சிவபெருமானுக்கும் நிஜமா ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஏன் பூசறோம்?

அண்மைய செய்திகள்

எல்லாரும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவதோடு நெற்றி நிறைய பட்டை யையும் போட்டுப்போம். இப்படி நெற்றியில் அணியும் விபூதிக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்கு தெரியுமா? இந்த சாதாரண விபூதி கடவுளின் சக்தி என்று கூறப்படுகிறது.

கடவுளின் ஆன்மீக சாம்பலின் வடிவமாக கருதப்படுகிறது. இயற்கையாகவே இது பக்தியை வழங்கக் கூடியது என்று நம்பப்படுகிறது. அந்தளவுக்கு ஆன்மீக மரியாதை இந்த விபூதிக்கு கொடுக்கப்படுகிறது என்றே சொல்லலாம்.

விபூதி என்று பெயர் வரக்காரணம்?

விபூதி என்ற பெயர் ‘விபூ’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு ஆத்மார்த்தமான, சக்தி வாய்ந்த, நித்தியமான இறைவன் என்று பொருளாகும். இது கடவுளின் மிக உயர்ந்த சக்தியின் வெளிப்பாடு ஆகும்.

புனித அடையாளம்

விபூதி இந்து மதத்தின் படி சிவனின் அடையாளமாக கூறப்படுகிறது. அதனால் தான் சிவன் பக்தர்கள் நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்திராட்சை கொட்டையும் அணிகின்றனர். இது தூய்மை, பாதுகாப்பு, தியாகம் மற்றும் சக்தியை உறிஞ்சும் ஒன்றாக கருதப்படுகிறது. நமது உடல் சாம்பலாகும் போது, மாட்டுச் சாணத்தை எரிக்கும் போது கிடைக்கும் சாம்பல் தான் இந்த திருநீறு. இது நெருப்பில் இடும் தியாகத்தை காட்டுகிறது. இந்த புனித சாம்பலை மக்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.

புனித சாம்பலின் பயன்கள்
உடலின் அடையாளமாக உள்ளது உடலில் ஆத்ம சக்தியை தக்க வைக்கிறது. குணப்படுத்துவதற்கான மருந்து எதிர்மறை சக்திகளிடமிருந்து நம்மை காக்கிறது. மாய வித்தை காட்ட, பேயை விரட்ட போன்ற மர்ம செயலுக்கும் பயன்படுத்துகின்றனர். உடலையும் மனதையும் சுத்தப்படுத்துகிறது. அவநம்பிக்கையை குறைத்து தெய்வ நம்பிக்கையை ஊட்டுகிறது.

சிவனும் விபூதியும்

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய ஆரம்பத்தை பறைசாற்றுகின்றன. அது போன்று தான் நமது பிறப்பும் இறப்பும். இதற்கெல்லாம் தலையாய கடவுள் சிவன் தான். உலகில் உள்ள உயிர்களை படைப்பதும் அழிப்பதும் அவனே. அவரது மூன்றாவது கண் சர்வ வல்லமையும் படைத்த அறிவுக் கண்.

நம் வாழ்க்கை எல்லாம் ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும், மிஞ்சுவது நம் சாம்பல் மட்டுமே. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணுவால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் கடைசியில் சாம்பாலாக்கப்படுவது தான் பிரபஞ்சம் சொல்லுகிறது. அந்த புனித சாம்பலை உடம்பு முழுவதும் நாம் பூசிக் கொள்வது சிவனின் சக்தியை ஈர்க்க வழிவகுக்கிறது. இந்த சாம்பல் சிவனின் கோபத்தையும் எடுத்துரைக்கிறது. உயிர்களிடத்து உள்ள தீங்குகளை பாவங்களை போக்கி சாம்பலாக்கி புத்துயிர் மறுபிறவி கொடுக்கிறார் என்பது

Applying-Vibhuti-on-forehead-thinatamil
Applying-Vibhuti-on-forehead-thinatamil

பொருள்.

காமத்தின் கட்டுப்பாடு

விபூதி சிவனின் அடையாளமாக பார்க்கப்படுவதோடு பாலியல் ஆற்றலின் எஞ்சிய சக்தியாக விளங்குகிறது. வேதவாக்கியங்களின்படி விபூதி தேஜஸை அதாவது காமத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை தருகிறது. உடம்பில் ஏற்படும் காம இச்சைகளை எரித்து மனசு தூய்மையாக இருக்க உதவுகிறது. உடம்பில் உள்ள சூட்டை குறைத்து காமத்தை கட்டுப்படுத்துகிறது. சிவன் தனது மூன்றாவது கண்ணான தன் நெற்றிக் கண்ணை திறந்து மன்மதனின் காமத்தையும், ஆசையும் எரிக்கலானார் என்று கூறப்படுகிறது.

விபூதிகளின் 8 வகையான சக்திகள்

அனிமன் – சிறிய சக்தி
பிரப்தி – பெரும் சக்தி
பிரக்மியாம் – வெளிப்படையான சக்தி மற்றும் ஆசைகளை நிறைவேற்ற கூடியது.
லெகிமேன் – இலகுவான சக்தி
இஸ்கிதா – அதிகாரத்தை பெறுவதற்கான சக்தி
வசிதா – களிப்பு, மயக்கம், வசியம் மற்றும் ஏமாற்றும் சக்தி
மஹிமான் – மாய மந்திரவாதிகளுக்கு பலத்தை வலிமையை கொடுக்கும் சக்தி
காமவசியாதா- காமம், ஆசைகளை கட்டுப்படுத்தும் சக்தி.

- Advertisement -

More articles

Latest News

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..A  B  C https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || ).push({});D E F G H  I  J  K Lhttps://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னிதுலாம் விருச்சகம் தனுசுமகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம்...

உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..! மக்களே உஷார் !!

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும்.ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா?அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்...

T ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு...

R ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும்,...