பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேகா. பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர் சீரியல், சின்னத்திரைகள் தற்போது முழுமையாக இறங்கிவிட்டார்.
இயக்குனர் பாரதி ராஜா தான் இவரை தன் கடலோர கவிதைகள் படம் மூலம் அடையாளம் காட்டினார்.
கடைசியாக நாம் சினிமாவில் அவரை விஜய் நடித்த தலைவா படத்தில் பார்த்திருப்போம் தானே.
அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் புன்னகை மன்னன்.
பிக்பாஸில் தன்னை சினிமாவிற்கு அனுப்பி தன் பெற்றோர் மிகவும் பயந்ததாகவும் கூறினார். இதற்கு காரணம் அவரின் அப்பாவுக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்காது என்பதுடன் மகள் ரேகாவின் மேல் அவர் வைத்திருந்த அதீத அன்பும் அக்கறையும் தானாம்.
இப்படியான அவர் தன்னுடைய அப்பாவின் மறைவுக்கு பின் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அவருக்கு ஒரு கல்லறை கட்டியுள்ளதாகவும் அதன் அருகே யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளாராம்.
தான் இறந்த பிறகு தன்னையும் தன் தந்தைக்கு அருகே அடக்கம் செய்து விட வேண்டும் கடந்த வருட பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.