நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து மூன்று மாதம் கர்பம் என்ற வதந்தி கிளம்புவதற்கு ஒரு மோதிரம் தான் காரணம். ஆனால் அது நிச்சயதார்த்த மோதிரம் இல்லை.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று நேற்றில் இருந்து பேச்சாக உள்ளது.
அதற்கு காரணம் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் தான்.
நயன்தாரா கையில் இருக்கும் மோதிரம் மட்டும் தெளிவாகத் தெரியும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் ஏதோ ரொமான்ஸ் மூடில் புகைப்படம் எடுத்து வெளியிட அதை பார்த்தவர்களோ இது நிச்சயதார்த்த மோதிரம் தான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.
View this post on Instagram
ஆனால் அது நிச்சயதார்த்த மோதிரம் கிடையாது. நயன்தாரா வழக்கமாக அணியும் மோதிரம் தான்.
முன்பும் கூட விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்களில் நயன்தாராவின் விரலில் அதே மோதிரம் தான் இருக்கிறது. இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் நிச்சயதார்த்த பேச்சு கிளம்பும் என்று தெரிந்தே விக்னேஷ் சிவன் போஸ்ட் செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வர வர விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் கமல் ஹாசனின் ட்வீட் மாதிரி இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை என சிலர் கமெண்ட் அடித்துள்ளனர். எங்களுக்கு திருமணம் என்று விக்னேஷ் சிவனோ அல்லது நயன்தாராவோ அறிவிப்பு வெளியிடும் வரை எதையும் நம்ப முடியாது.