நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று தான் உணர்ந்துள்ளதாகவும், ஆனால் வன்முறையை நியாயப்படுத்த இதை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் அல்-ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
“கேலிச்சித்திரங்களால் மக்கள் அதிர்ச்சியடையக்கூடும் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால், வன்முறையை நியாயப்படுத்த இதனை முன்வைப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நீஸ் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் மூன்று பேர் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததையடுத்து தாக்குதல் தொடுத்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.
“நம்முடைய சுதந்திரங்களையும், உரிமைகளையும் பாதுகாப்பது என் கடமையாக நான் கருதுகிறேன்,” என்றும் மக்ரோன் கூறியுள்ளார்.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்