பண மோசடி வழக்கில், நடிகை ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடிகை ஸ்ருதி (25). இவர், தனது தாய் சித்ரா (48), தம்பி சுபாஷ் (23), வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் (38) ஆகியோருடன் சேர்ந்து பலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். குறிப்பாக, வெளிநாட்டில் வசிக்கும் தமிழக இன்ஜினியர்களை திருமணம் செய்வதாக கூறி பல லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். சேலத்தை சேர்ந்த பாலமுருகன், நீலகிரியை சேர்ந்த சந்தோஷ்குமார், நாமக்கல், வேலூர், சென்னை உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 8 பேரிடம் 3 ேகாடி ரூபாய் பறித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ருதி மீது கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை சென்னை, விழுப்புரம், கோவை உட்பட பல்வேறு பகுதியில் 5 வழக்கு பதிவாகியுள்ளது. கோவை போலீசார் 2 மாதம் முன் ஸ்ருதி, அவர் தாய், வளர்ப்பு தந்தை, தம்பியை கைது செய்தனர். இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் ஸ்ருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
from dinakaran