தமிழ் சினிமாவில் இவ்வளவு புகழையும், விமர்சங்களையும் எந்த ஒரு நடிகையும் பெற்றிருக்க முடியாது என்றால் அது நடிகை நயன்தாரா தான்.
லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஒரு பட்டத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார் எனவும் கூறலாம்.
இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT-யில் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
மேலும் இன்று நடிகை நயன்தாராவிற்கு பிறந்தநாள் என்பதால் அவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நயன்தாராவிற்கு பல திரைப்படங்களுக்கு பின்னணி குரல் தந்தவர் தான் தீபா வெங்கட், இவர் பிரபல சன்-டிவி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து, வருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் தீபா வெங்கட்.