பிரான்சில் வீடின்றி தெருக்களில் வசிப்போருக்கு உதவுவதற்காக, எந்த விளம்பரமும் இன்றி பிரான்ஸ் பணியாளர்கள் செய்து வரும் ஒரு தியாகச் செயல் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பிரான்சின் Lyon நகரில் செல்வந்தர் ஒருவர் உருவாக்கியுள்ள ஒரு அமைப்பு ‘The Company of Possibilities’ என்னும் அமைப்பு.
இந்த அமைப்பினர் தெருக்களில் வாழ்வோருக்கு உதவி வருகிறார்கள். புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலருக்கு சின்னதாக, ஆனால் எல்லா வசதிகளுடனும் வீடுகள் கூட கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த அமைப்புக்கு பிரான்ஸ் பணியாளர்கள் தங்கள் விடுமுறையை தியாகம் செய்து உதவி வருகிறார்களாம்.
தங்கள் விடுமுறை தினத்தன்று அவர்கள் வேலை செய்வதால் கிடைக்கும் பணத்தை அவர்களது அலுவலகம் ‘The Company of Possibilities’ அமைப்புக்கு அளிக்குமாம். இந்த அமைப்பை உருவாக்கிய Alain Mérieux என்னும் அந்த செல்வந்தர் கூறும்போது, தனது இளமைப் பருவத்தை நினைவுகூறுகிறார்.
தான் சிறு வயதாக இருக்கும்போது, இப்படி வீடற்ற நிலைமையை தான் பார்க்கவில்லை என்கிறார்.
கடந்த காலத்தைப் போன்று அனைவரும் வீடுகளில் ஒற்றுமையாக வாழும் ஒரு நிலைமையை உருவாக்க தான் விரும்புவதாக தெரிவிக்கிறார் Mérieux.
அவரது முயற்சிக்கு Lyon நகர நிறுவனங்களும் உதவ முன்வந்துள்ளன, அவர்களது பணியாளர்களின் தியாகத்தை முதலீடாகக் கொண்டு!