பிரான்ஸில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவதை தொடர்நது, தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் புதிய மசோதாவுக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸின் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், வெறுப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், வீட்டுமுறைக் கல்வி மீதான கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கும் மற்றும் இன்னும் பல சிக்கல்களைத் தவிர்க்கவும், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோங் இந்த புதிய சட்டத்தை அமல் படுத்தியுள்ளார்.
இந்த சட்டம் மசூதிகளுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதை தடுக்கும்.
பெற்றோர்கள் குழந்தைகளை ரகசிய இஸ்லாமிய நிறுவனங்களில் சேர்ப்பதைத் தடுக்கும் பொருட்டு, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை வீட்டுமுறைக் கல்விக்கு எதிரான விதிகளை கடுமையாக்குகிறது.
மேலும், கட்டாய திருமணங்கள் மற்றும் சிறுமிகள் மீதான கன்னித்தன்மை சோதனைக்கு எதிரான விதிகளும் இந்த சட்டத்தில் உள்ளன.
இந்தப் புதிய வரைவுச் சட்டத்தைக் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்திய பிரான்ஸின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இது முஸ்லிம்களை தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் என்று கூறினார். மேலும், இது ஒரு “பாதுகாப்புச் சட்டம்” என்று கூறிய அவர், இது எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்றும் கூறினார்.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்