தமிழ் சினிமாவில் கயல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி புகழ் பெற்றவர் தான் கயல் ஆனந்தி.
இதையடுத்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன்,விசாரண, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென சாக்ரடீஸ் என்பவருடன் கடந்த நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே திடீர் திருமணம் ஏன் என்பதை பற்றி கயல் ஆனந்தி விளக்கமளித்துள்ளார். அதில், ”நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம்.
இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது.
பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன்.
என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்.” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.