தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கிற்கு அருகில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்து ஒன்றில் குறைந்தது 20 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுதவிர, 29 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் பேருந்து ஒன்றுடன் தொடருந்து மோதியதனை அடுத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.சமய நிகழ்வு ஒன்றிற்காக பேருந்தில் 60 பயணிகள் பயணித்திருந்தாதாக அந்த மாவட்ட காவற்துறை குறிப்பிட்டுள்ளது.பாதுகாப்பு கடவை அற்ற நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.வெளிநாட்டுச் செய்திகொரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் ஷோன் கொன்லி தெரிவித்துள்ளார்.
அவர் மூலம் தொற்று பரவுவதற்கான ஏதுநிலை தற்போது இல்லை எனவும் அவரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட பல்வேறு பரிசோதனைக்கு பின்னர் டொனால்ட் ட்ரம்ப் வழமையான பணிகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சிகிச்சையின் பின்னர் நேற்று வெள்ளை மாளிகை திரும்பிய அவர் அந்த மாளிகையின் தெற்கு பகுதியில் உள்ள உப்பரிகையில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் முன்னர் தோன்றி உரையாற்றியுள்ளார்.
முகக்கவசம் அணியாத நிலையில் அவர் உப்பரிகையில் இருந்து 18 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்.தமது தேக நிலை வழமைக்கு துரித கதியில் திரும்ப வேண்டும் என வாழ்தியவர்கள் அனைவருக்கும் தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.