கமல்ஹாசன் பங்குபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 100 நாட்கள் பங்குபெற தயாராகிக் கொண்டிருந்தார் யாஷிகா ஆனந்த்.
100 நாள் உங்களாலே தைரியமா இருந்துட முடியுமா?
நான் சின்னப் பொண்ணா இருந்தாலும், ரொம்ப தைரியமான பொண்ணு சார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துலே நடிச்சப்பவே நான் எவ்ளோ தைரியம்னு உங்களுக்கு தெரிஞ்சுருக்கணும். நான் புல்லட்டெல்லாம் ஓட்டுவேன். ஒன்பதாவது படிக்கிறப்பவே ஆம்பளைப் பசங்க மாதிரி நான் பைக் ஓட்ட ஆரம்பிச்சிட்டேன். இப்போ பதினெட்டு வயசு ஆகி, லைசென்ஸ் கிடைச்சதுமே சொந்தமா ஒரு புல்லட் வாங்கிட்டேன். இப்போ எங்கே போறதா இருந்தாலும் அதில்தான் போறேன். அப்படிப்பட்ட தில்லான பொண்ணு, இந்த நூறு நாளை ஊதித் தள்ளிட மாட்டேனா?
அடுத்து?
கமல்சாரோட புரோகிராம் போயிக்கிட்டிருக்கு. இதுதவிர ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, நோட்டான்னு பிராமிஸிங்கான புராஜக்ட்ஸ்.
அரசியலில் குதிப்பீங்களா?
நிச்சயமா குதிப்பேன். வரவேண்டிய நேரத்துலே வந்தே தீருவேன். நீங்க எல்லாரும் மறக்காம ஓட்டு குத்தணும். ஓக்கேவா?
கமல் – ரஜினி ரெண்டு பேருமே அரசியலில் இருக்குறாங்க. யாரை ஆதரிக்கிறீங்க?
ரெண்டு பேரையுமே ஆதரிக்கிறேன். யாருக்கு ஓட்டு போடப்போறேன்னு கேட்காதீங்க.
கெளதம் கார்த்திக்?
நீங்க என்ன அர்த்தத்துலே கேட்குறீங்கன்னு புரியுது. அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லியான பர்சனாலிட்டி. ஃப்ரெண்ட், அவ்ளோதான்.
தமிழையே கொஞ்சிக் கொஞ்சிதான் பேசுறீங்க. டபுள் மீனிங்கில் யாராவது பேசுனாங்கன்னா புரிஞ்சுப்பீங்களா?
நீங்க இன்னும் இருட்டு அறையில் ஃபீவரில் இருந்து வெளியே வரலைன்னு நெனைக்கிறேன். ஹரஹர மஹாதேவகி படத்தை நான் ஃப்ரெண்ட்ஸோடு தியேட்டரில் போய் பார்த்து ரொம்பவே என்ஜாய் பண்ணினேன்னா பார்த்துக்கங்க. அதே டீமோட அடுத்த படத்துலே நானே நடிக்கப் போறேன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. எல்லாம் புரிஞ்சு, தெரிஞ்சுதான் தில்லா அந்தப் படத்துலே நடிச்சேன். அதுக்குன்னு எங்கிட்டே நேரடியா வந்து யாராவது டபுள் மீனிங்கில் பேசுனாங்கன்னா டங்குவார் கிழிஞ்சுடும். எனக்கு கராத்தே, குங்ஃபூவெல்லாம் தெரியும்…. தெரியுமில்லே?