France; நேற்று பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பில், திரையரங்குகள், நாடக, கலை நிகழ்ச்சி அரங்குகள் என்பன கூட, ஜனவரி 7 இற்கு முதல் மிண்டும் திறக்கப்படாது என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் பத்திரிகையளார சந்திப்பில், பிரதமரிடம் ஒரு ஊடகவியலாளர், ‘நீங்கள் கலாச்சார நிகழ்வுகளைத் தள்ளிப் போடுகின்றீர்கள். ஆனால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ரோஸ்லின் பசெலோ ஏன் சமூகம் அளிக்கவில்லை. இது திட்டமிட்ட செயலா? ‘ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் அவர் கலாச்சார நிகழ்வுகளின பிரதிநிதிகளுடன் கலந்துறையராடலில் உள்ளமையால் சமூகம் அளிக்கவில்லை எனப் பிரதமர் பதிலளித்திருந்தார்.
ஆனால், இன்று காலை, திரையரங்குகள், நாடக, கலை நிகழ்ச்சி அரங்குகள் போன்ற கலாச்சார அரங்குகள், மையங்கள் என்பன ஜனவரி 7 திறக்கப்படும் என்பது நிச்சயமல்ல. ஜனவரி 7ம் திகதி இவற்றைத் திறப்பதற்கான கால எல்லையின் முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும் என்ற அதிரடி அறிவிப்பை, கலாச்சர அமைச்சர் ரோஸ்லின் பசெலோ (Roselyne Bachelot) அறிவித்துள்ளார்.
கலாசார நிகழ்வுகளின் பிரதிநிதிகளுடன் தான் எப்பொழுதும் தொடர்பில் இருப்பேன் என்றும், அவர்களிற்கான உதவிகள் உடனடியாகச் செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.